நீர்கொழும்பில் (Negombo) முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று (14) நீர்கொழும்பு போரதோட்டை (கம்மல் தொட்டை) கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு தலுபத பகுதியைச் சேர்ந்த ஜயந்த புஷ்பகுமார என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவல்துறை சார்ஜன்ட் சாரதியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கொச்சிக்கடை காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர்
இதனடிப்படையில், கொச்சிக்கடை காவல்துறையினர் மற்றும் நீர்கொழும்பு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீதவானின் விசாரணைக்குப் பிறகு, சடலம் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

