அனுராதபுரம் (Anuradhapura) – ருவன்வெலிசாய காவல் அரனில் சேவையாற்றிய காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு (10) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் விசாரணை
அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான காவல்துறை அதிகாரியே சம்பவத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Source: https://ibctamil.com/article/police-officer-killed-in-gun-shooting-anuradhapura-1720668116

