முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தவர்கள்.

மத்திய வங்கியை பிணைமுறை மோசடி, உயிர்த்த ஞாயிறுத் தற்கொலை கொண்ட தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் ரணில் உள்ளிட்ட அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன என குற்றம் சுமத்தி கோட்டைபாயவை ஆட்சி பீடம் ஏற்றினர்.

எனினும் பின்னர் கோட்டாபயவை பதவியில் இருந்து துரத்தி அடிப்பதற்கு பாரிய மக்கள் கிளர்ச்சி எழுந்தது.

இந்த மக்கள் போராட்டத்தின் இறுதியில் மீண்டும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இது உலக வரலாற்றில் எங்கும் எப்போதும் இடம்பெறாத ஓர் சம்பவமாக கருதப்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்கவை விரட்டிய மக்கள் ஆணையை கொண்டு அவர் மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ரணில் விக்ரமசிங்கவும்

ஐக்கிய மக்கள் சக்தியும் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் ஒரே விதமான கொள்கைகளை கொண்டவை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வேறு விதமான கொள்கையை கொண்டவை.

எனவே இவற்றின் கொள்கைகள் மாறுபட போவதில்லை.

ராஜித்த சேனாரத்ன, கபீர் ஹாசிம் போன்றவர்கள் ரணில் தரப்பும், சஜித் தரப்பும் இணைந்து செயல்படுவது குறித்து பல்வேறு பேச்சு வார்த்தைகளையும் முன்னெடுக்கின்றனர்.

சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் | Policy Against Ranil Wickremesinghe

இரண்டு பிரிவுகளாக பிரித்து தேர்தலில் போட்டியிட்டால் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டும் என்பதனால் ராஜித்த இந்த முயற்சியை முன்னெடுக்கின்றார்.

எதிர்வரும் செப்டம்பர் 28ம் திகதி அல்லது அக்டோபர் ஐந்தாம் திகதி பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறகூடும்.

தெற்கில் சிங்கள வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒருவருக்கு ஒருவர் எதிரான அரசியலை செய்கின்றனர்.

2005இல் வடக்கிற்கு எதிராக 2010இல் தமிழருக்கு, எதிராக 2015மற்றுத் 2019 முஸ்லிம்களுக்கு எதிராக எமது கடந்த கால அரசாங்கங்கள் அனைத்தும் எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஆட்சி பீடம் ஏறியவை.

இந்திய அரசு சுதந்திரம்

இலங்கையின் அரசியல் கட்டமைப்பானது ஒரு தரப்பிற்கு எதிரான அரசியலை முன்னெடுக்கும் விதமாக காணப்படுகின்றது.

வடக்கு கட்சிகள் தெற்கே எதிராகவும் தெற்கு கட்சிகள் வடக்கிற்கு எதிராகவும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டில் குரோத அரசியலிலே முன்னெடுக்கப்படுகின்றது.

சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் | Policy Against Ranil Wickremesinghe

இவ்வாறான ஒரு பின்னணியில் நாட்டை ஒரு அங்குல மேலும் முன்னோக்கி நகர்த்த முடியாது.  இலங்கையில் இனவாதம் என்பது முழுக்க முழுக்க அரசியலாகும். தேசிய மக்கள் சக்தி இனவாத அரசியலுக்கு எதிரான தேசிய ஒற்றுமை அரசியலை முன்னெடுக்கின்றது.

1948 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்று 1947 ஆம் ஆண்டு இந்திய அரசு சுதந்திரம் பெற்றுக்கொண்டது.

இந்தியா ஒரு பாரிய ராஜ்யமாகும்.  பல்வேறு மொழிகள் பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் சமூகத்தை கொண்டது

இந்தியாவின் தேசிய தலைவர்கள் இந்தியர் என்ற கொள்கை அடிப்படையில் அரசியல் செய்கின்றனர்.

இதன் காரணமாகவே அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் உருவாகின்றனர்.  இதன் காரணமாகவே மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். பழங்குடியின பெண் ஒருவர் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

1948 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இலங்கையில் பிரிவினைவாத அரசியல் காணப்பட்டது.  எமது தேசிய தலைவர்களும் பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்தனர்.

30 ஆண்டுகால யுத்தம்

ஐக்கிய படுத்தும் அரசியலமை இடம் இருக்கவில்லை. நாம் எப்பொழுதும் பிரிவினை படுத்தல் தேசப்படுத்தல் அரசியலையும் முன்னெடுத்தும் இவ்வாறான அரசியல் தற்போது போதுமல்லவா?

30 ஆண்டுகால யுத்தம் நடந்தது பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  வடக்கு கிழக்கு தெற்கு பெற்றோருக்கு பிள்ளைகள் இலக்க நேரிட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் அரசியல் ஆட்சி அதிகாரம் சில குடும்பங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது.

சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் | Policy Against Ranil Wickremesinghe

பண்டாரநாயக்கள், ஜெயவர்த்தனக்கள், ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தை நடத்தினார்.   ஜனாதிபதியின் மகன் ஜனாதிபதியாக வேண்டும் அமைச்சரின் மகன் அமைச்சராக என்ற கலாச்சாரம் நீடித்து வருகின்றது.

இந்த நாட்டை இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் இலங்கையில் இடம்பெற்ற கண்டுபிடிக்கப்படாத கொலைகளின் பின்னல் அரசியல்வாதிகள் உள்ளன

உங்கள் அனைவரின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள தயார்.

பௌத்த மதத்திற்கு என்ன ஆகும் என பலர் கேள்வி எழுப்புகின்றனர் எங்களுடைய எதிர்வாதிகள் இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகின்றனர்.

எதிர்தரப்பினர் வர்த்தகர்களை சந்தித்தால் நாம் ஆட்சிக்கு வந்தால் வர்த்தக வர்த்தகர்களுக்கு பாதிப்பு என கூறுகின்றனர்.

மருத்துவர்களை சந்தித்தால் மருத்துவர்களுக்கு பாதிப்பு என கூறுகின்றனர்

இவ்வாறு அவர்கள் சந்திக்கும் நபர்களுக்கு நாம் எதிரானவர்கள் என வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

பௌத்தர்களை பார்த்தால் நாம் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் என கூறுகின்றனர்.

ஒன்பதாம் சரத்தின் அடிப்படை

அரசியல் சாசனத்தில் ஒன்பதாம் சரத்தின் அடிப்படையில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எவ்வித மாற்றங்களையும் நாம் செய்யப்போவதில்லை.

சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் | Policy Against Ranil Wickremesinghe

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது இந்த பேச்சு வார்த்தையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.  ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார், முஸ்லிம் காங்கிரஸின் ஹாக்கிம் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன போன்றவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இந்த புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது குறித்த பேச்சு வார்த்தைகளின் போது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒன்பதாம் சரத்தினை மாற்றுவது தொடர்பில் பேச்சுக்கள் எழவில்லை.

கலந்து கொண்ட எல்லோரும் ஒன்பதாம் சரத்தினை ஏற்றுக் கொண்டிருந்தனர்.  ஒன்பதாம் சரத்தில் கை வைப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு தேவையில்லை.

அவ்வாறு இருக்கையில் நாம் ஏன் அதில் கை வைக்க போகின்றோம்.  நாம் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கோ எதிராக ஆட்சியை கைப்பற்ற விரும்பவில்லை.

இனவாதத்தை ஒழிக்கும் நோக்கில் நாம் ஆட்சிக்கு வருகின்றோம்.  தமிழ் பேசும் மக்களுக்கு பொதுவான பிரச்சனைகளும் உண்டு அதேபோல அவர்கள் தமிழ் மொழி பேசுவதனால் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் உண்டு. அவற்றை நாம் அடையாளம் கண்டுள்ளோம் பொதுப்பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு வழங்குவோம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.