போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப் வண்டியை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தங்காலை(tangalle) பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை இன்று (ஒக்டோபர் 15) கைது செய்துள்ளனர்.
வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம்
குறித்த வாகனம் நேற்று பெலியத்த, புவக்தாண்டவ வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றிற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வாகனம் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரால் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உப தவிசாளர் சந்தேகத்தின் பேரில் கைது
அசல் இலக்கத் தகடு கொண்ட வாகனம் கம்பளை(Gampola) பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்ததையடுத்து, தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
https://www.youtube.com/embed/hnetHMS9etM