அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
கிளிநொச்சியிலிருந்து போட்டியிட்டவரும், இயக்கச்சி இராவணன் வனத்தின்
உரிமையாளருமான பொன் -சுதன் அமைச்சர் விஜித ஹேரத்தை(Vijitha Herath) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது கொழும்பிலுள்ள தேசிய மக்கள் சக்தியின்(NPP) தலைமையகத்தில் நேற்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது.
மாவீரர் துயிலுமில்லங்கள்
விஜித ஹேரத்தை
சந்தித்து இயற்கை வளங்கள், மற்றும் பிரதேச அபிவிருத்தி, இளைஞர்கள் முன்னேற்றம்
சம்மந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக மாவீரர் துயிலுமில்லங்கள் விடுவித்தல், மக்களின் காணிகள்
அவர்களுக்கே ஒப்படைத்தல் போன்ற முக்கிய விடயங்களை அமைச்சரின் கவனத்திற்கு
கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.