3,500 மெட்ரிக் தொன் ‘பொன்னி சம்பா’ அரிசி நாட்டிற்கு இறக்குமதி
செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உள்ளூர் சந்தையில் தற்போது நிலவும் ‘கீரி சம்பா’ அரிசிக்கான
பற்றாக்குறைக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஒக்டோபர் (15) ஆம் திகதி அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்தது.
அரிசி இறக்குமதி
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதல் தொகுதி ஒக்டோபர் 23 அன்று
நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து ‘பொன்னி சம்பா’ அரிசியின் மேலும் தொகுதிகள் கடந்த வெள்ளிக்கிழமை
மற்றும் சனிக்கிழமை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை சுங்கம்
தெரிவித்துள்ளது.

இதேவேளை, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின்
அடிப்படையில், ஒவ்வொரு இறக்குமதியாளரும் அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன்
அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

