ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக் குற்றச்சாட்டுக்கள், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டுக்கள், லசந்த விக்கரமசிங்க படுகொலைக் குற்றச்சாட்டுக்கள், ஊடகவியலாளர் நடேசன், விரிவுரையாளர் தம்பையா, உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலைக் குற்றசாட்டுக்கள் போன்றனவற்றால் பிள்ளையானுக்கு ஆபத்து இல்லையா..
அநுர குமார ஆட்சி இவற்றையெல்லாம் விசாரிக்கும் போல இருக்கின்றதே என்று TMVP முக்கியஸ்தர்களிடம் யாராவது கேள்வியெழுப்பினால்,
பயத்தை கண்களில் காட்டாமல் அவர்கள் கூறுகின்ற பதில் இதுதான்.
“அநுர எம் மீது கை வைப்பதற்கு சீனா அணுமதிக்காது”.
ஆனால், பிள்ளையான் மீதான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும், கண்டிப்பாக பிள்ளையானுக்கு எதிராக நடவடிக்கைகள் இடம்பெற்றே தீரும் என்று ஜே.வி.பி. வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஐ.நா.வின் பொறுப்புக்கூறல் தொடர்பான அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாடாளுமன்றக் குழு போன்றன இந்த விடயத்தில் கடும் அழுத்தம் கொடுத்துவருவதாகவும், முக்கிய இராணுவ அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காவது அரசாங்கம் பிள்ளையானை பிடித்து உள்ளே தள்ளியே தீரும் என்று கூறுகின்றார்கள் ஆட்சியதிகாரத்துடன் நெருக்கமான வட்டாரங்கள்.