இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புகள்
நாளை 30ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் தபால் மூல
வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள உறுதிப்படுத்தல் அதிகாரிகளின்
முன்னிலையில் வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்களிக்கும் திகதிகள்
அத்துடன், இந்த 3 தினங்களில் வாக்களிக்க
முடியாதவர்கள் எதிர்வரும் நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிக்க
வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க
தெரிவித்துள்ளார்.

