முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை மின்சார சபையில் குவியும் பணம் – கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் மக்கள்

நாட்டில் மின்சாரம் துண்டிக்கும் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின்சாரம் துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி 2023 ஆம் ஆண்டுக்குள் உரிய நேரத்தில் பணம் செலுத்தாமையால் 970,933 மின்சாரம் துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார துண்டிப்பு

2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை 6,28,286 மின்சாரம் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 505,949 வீடுகள், 8,579 தொழிற்சாலைகள், 2,090 வழிபாட்டுத் தலங்கள், 39 ஹோட்டல்கள், 359 பொதுத்துறை நிறுவனங்கள், கடைகள் மற்றும் 111,276 மற்றவை அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையில் குவியும் பணம் - கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் மக்கள் | Power Cuts Increased In Sri Lanka

கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 2,660 மின்சாரம் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு சராசரியாக 3,443 மின்சாரம் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மின்சார சபையின் தரவுகள் சரியாக இல்லாத காரணத்தினால் மின்கட்டண அதிகரிப்பால் அநாதரவாக இருந்த மக்களுக்கு இவ்வருடம் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அடகு வைக்கும் மக்கள்

மின்சார சட்டத்தை மீறி இலங்கை மின்சார சபை பெரும் இலாபம் ஈட்டியுள்ளது.

எனினும் வாடிக்கையாளர் அடமானம் வைத்து கூட கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையில் குவியும் பணம் - கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் மக்கள் | Power Cuts Increased In Sri Lanka

இறுதியில் அடகு வைத்த தங்கப் பொருட்களுக்கு வட்டி கட்ட வேண்டியுள்ளது. மின்சார பாவனையாளர்கள் தமது தோட்டத்தில் உள்ள பச்சை இலைகளை கூட விற்பனை செய்து இந்த கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்