இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது சம்பூர் மின்நிலைய அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் மேற்கொண்ட இந்திய பயணத்தின் போது அதற்கான அழைப்பை விடுத்திருந்தார்.
செயற்பாடுகள்
இந்நிலையில் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, சம்பூர் சூரிய ஔி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
முன்னதாக இந்திய நிதியுதவியில் சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை நிறுவ நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், ஜே.வி.பி. கட்சியின் பலத்த எதிர்ப்பு காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்திய நிதியுதவியைக் கொண்டு சம்பூரில் சூரிய ஔி மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.