சில மருத்துவமனைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை உடனடியாகத்
தீர்க்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மருந்து விநியோக முறையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி இன்று(22)
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மற்றும்
சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
நீண்டகால உத்திகள்
அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி அணுகுவதை உறுதி செய்வதற்காக கொள்முதல்
மற்றும் விநியோக முறையை முழுமையாக மாற்றியமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
விடுத்துள்ளார்.

மருந்து கொள்முதலுக்கு திறைசேரி நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக்
குறிப்பிட்டு, எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க நீண்டகால
உத்திகளை உருவாக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

