எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கச்சத்தீவைப் பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடும்! மோடியின் கருத்துக்கு இலங்கையின் பதிலடி
கட்சியில் இணையப் போவதில்லை
எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம்.
அதுமாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை.” என்றார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறித்த கேள்வியும் விமர்சனங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கட்சிக்குள் இரு பிளவுகள்! அவசர அவசரமாக கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |