ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை இரத்து செய்தல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலத்தின் 2வது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (10) இடம்பெற்றது.
பிரேரணைக்கு ஆதரவாக 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 1 நாடாளுமன்ற உறுப்பினரும் வாக்களித்தனர்.
எதிர்த்து வாக்களித்த உறுப்பினர்
ஜனாதிபதியின் உரிமைகள் இரத்து செய்தல சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்த ஒரே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆவார்.

இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை இரத்து செய்தல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

