நாடு முழுவதும் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 அதிபர் ஒருவர் அதிபர் பதவியை வகிக்க உள்ளார்.
நேர்காணலுக்கு அழைக்கப்படவுள்ளவர்கள்
விண்ணப்பத்தவர்களில் தரம் 1 முதன்மை சேவை அதிபர்கள் 79 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நேர்காணல்கள் பெப்ரவரி 6 முதல் 11 வரை இசுருபாவில் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.