அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் (Jaffna) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று (29.04.2024) காலை இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே, ‘வேண்டும் வேண்டும் வேலை வேண்டும்’, ‘நாசம் நாசம் கனவுகள் நாசம்’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை பட்டதாரிகள் எழுப்பியிருந்தனர்.
தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மனு
இதனைத் தொடர்ந்து, நீண்ட காலமாக வேலையில்லாமல் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியும் தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
அதேவேளை, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளுக்கும் அந்த மனுவின் பிரதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகப் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனவும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்த உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி: வெளியாகியுள்ள தகவல்
நோயாளியை அழைத்து வந்தவர்களை தாக்கிய வைத்தியசாலை ஊழியர்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |