முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் பாடசாலை அதிபரை மாற்ற கோரி வெடித்த போராட்டம்

மன்னார் (Mannar) வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப் பாடசாலையின் அதிபரை உடனடியாக
மாற்றக் கோரி பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டமானது, பாடசாலைக்கு முன் இன்றைய தினம் திங்கட்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் போது, பிள்ளைகளின் கல்வியை பாளாக்காதே, ஒழுக்கம் இல்லாத உன்னால் எப்படி ஒழுக்கமான
சமுதாயத்தை உருவாக்க முடியும்? ஒரு குடும்பத்திற்காக ஊரை அழிப்பதா? உள்ளிட்ட
பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை

மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப் பாடசாலை கடந்த பல வருடங்களாக
கல்வியிலும்,விளையாட்டு நிகழ்வுகளிலும்,ஏனைய போட்டிகளிலும் சாதனை நிலை நாட்டி
வந்த நிலையில் அண்மைக் காலங்களாக பாடசாலை சகல துறைகளிலும் கீழ் மட்டத்தை
அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மன்னாரில் பாடசாலை அதிபரை மாற்ற கோரி வெடித்த போராட்டம் | Protest Demanding Change Of Principal Mannar

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கை
பாதிக்கப்பட்டதோடு, மாணவர்களின் சகல துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில்
உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

துரித நடவடிக்கை

நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறித்த
அதிபரை மாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மன்னாரில் பாடசாலை அதிபரை மாற்ற கோரி வெடித்த போராட்டம் | Protest Demanding Change Of Principal Mannar

இந்த நிலையில், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த போராட்டத்தை
முன்னெடுத்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயக்கல்வி
பணிமனை அதிகாரிகள் உடனடியாக குறித்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கை களை
மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில் போராட்டம் கை விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/protest-demanding-change-of-principal-mannar-1724672600?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.