யாழ்ப்பாணம், வலி வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை
அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது இன்று (07) முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
வெசாக் தினத்தை முன்னிட்டு விகாரையில் விசேட பூசைகள் நடைபெற்ற நிலையில் நேற்று
(06) மாலை முதல் இன்று (07.09) மாலை வரை குறித்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை
உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பொ.ஐங்கரநேசன், உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பொது
மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.






