முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முதல் உளவு தகவலை வழங்கியவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி

Courtesy: Sivaa Mayuri

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நீதிக்காக வாதிடும் செயற்பாட்டாளர் ஒருவர், 2019 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் பணி புரிந்த ஒருவரே, இந்த தாக்குதல்கள் தொடர்பாக இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் தகவலின் ஆதாரமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி, அப்போதைய அரச புலனாய்வுப் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன, வெடிகுண்டுத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தியாவிடம் இருந்து முக்கியமான உளவுத்துறையைப் பெற்றதாக, செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க என்ற செயற்பாட்டாளர் கூறியுள்ளார்.

விமானப்படைத் தலைவர்கள்

ஐந்து ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் சர்வதேச புலனாய்வாளர்களின் இடைவிடாத முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த குறிப்பிட்ட தகவலின் ஆதாரம் அடையாளம் காணப்படவில்லை.

question-first-person-intelligence-easter-attack

இந்தநிலையில்   ஷேஹான் மாலக்க  உளவுத்துறை ஆதாரத்தின் அடையாளத்தை வெளியிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

இலங்கையில் செயற்படும் இந்திய புலனாய்வு அமைப்பான RAW உடன் இணைக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகரக அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ரா, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி உடனடி அச்சுறுத்தல் குறித்து நிலந்த ஜெயவர்தனவுக்கு முதலில் அறிவித்தார் என்று மாலக்க கூறியுள்ளார் 

எனவே லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ராவிடம் திகதிகள், பெயர்கள் உள்ளிட்ட துல்லியமான விபரங்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்தால், முழு தகவல்களையும் சதியையும் வெளியே கொண்டு வர முடியும் என்று மாலக்க தெரிவித்துள்ளார்.

நிலந்த ஜெயவர்தனவுடன் இந்த தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களுடன் இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் சஞ்சய் மித்ரா இலங்கைக்கு வந்ததாக ஷேஹான் மாலக்க கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கம் 

இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி இராணுவத் தளபதிகள் உட்பட இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் ஒரு கூட்டு பாதுகாப்பு சந்திப்பு இடம்பெற்றதாகவும் மாலக்க குறிப்பிட்டுள்ளார் 

ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்ற, இந்த கூட்டத்தில் உளவுத் தகவல்களை வழங்குவதிலும் பெறுவதிலும் முக்கியப் பிரமுகர்களான ரவி மிஸ்ரா மற்றும் நிலந்த ஜயவர்தன இருவரும் இருந்தனர்.

question-first-person-intelligence-easter-attack

எனினும் இருநாட்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த முக்கியமான தகவல் ஏன் விவாதிக்கப்படவில்லை என்பது கேள்விக்குறியானது என்று மாலக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே ரவி மிஸ்ரா தொடர்பில் இந்திய அரசாங்கம் ஏதேனும் விசாரணைகளை மேற்கொண்டதா என இலங்கை கேட்க வேண்டியது அவசியமானது என ஷெஹான் மாலக்க குறிப்பிட்டுள்ளார்.

இல்லையென்றால், இலங்கை அரசாங்கம் விசாரணையைக் கோர வேண்டும். லெப்டினன்ட் கேர்னல் ரவி மிஸ்ரா நாட்டின் பாதுகாப்புத் துறைகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கலாம்.

இந்தநிலையில் அவர் இந்த தகவலை நிலந்த ஜயவர்தனவுக்கு மட்டுமே வழங்கினாரா என்பதையும் இலங்கை  உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஷெஹான் மாலக்க வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.