இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின்(
Sanjay Rajaratnam) சேவைக்காலத்தை நீடித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wicremesinghe) விசேட அனுமதியை வழங்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது.
சட்டமா அதிபரின் பதவிக் காலம் இன்றுடன் (26) நிறைவடையவுள்ளது.
அதேசமயம் ஏற்கனவே அவருக்காக அதிபர் மேற்கொண்ட சிபாரிசை நிராகரித்த அரசமைப்பு சபை இன்று விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
சட்டமா அதிபரின் சேவை
இந்தப் பின்னணியிலேயே அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி அதிபர் ரணில், சட்டமா அதிபரின் சேவைக் காலத்தை நீடித்திருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது.
முன்னதாக அரசமைப்பு சபைக்கு 8 பக்கங்களைக் கொண்ட காட்டமான கடிதமொன்றை சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிய அதிபர் ரணில், அரசமைப்புச் சபையின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.