எதிர்க்கட்சியின் பலமான குரலாக இருந்ததாலா நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்(chamara sampath dassanayake) கைதானார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மாகாண சபையின் நிலையான வைப்பு நிதியை ஒரு அரச வங்கியில் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரியின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் குடும்ப உறுப்பினர்களை நான் சந்தித்தேன். நான் பிரதமராக இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன் திறைசேரி செயலாளரால் மாகாண சபை நிதியை நிலையான வைப்பு கணக்குகளில் வைக்க முடியாது என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அரசாங்க நிதி மற்றும் பிற ஒதுக்கப்பட்ட நிதிகள் இரண்டையும் ஒரே வருடத்திற்குள் செலவிட வேண்டும் அல்லது நிதி அமைச்சகம் அல்லது தொடர்புடைய மாகாண சபை அமைச்சகத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்கால திட்டங்களில் பயன்படுத்துவதற்காக அந்த நிதியை நிறுத்தி வைப்பது சட்டவிரோதமானது என்பதால், அந்த நடைமுறையை நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

கவலைகளை எழுப்பிய சாமர சம்பத்
அந்த நேரத்தில், முதலமைச்சர் சாமர சம்பத் மற்றும் பல முதலமைச்சர்கள் தொடர்பில் கவலைகளை எழுப்பினர், மேலும் இதுபோன்ற வைப்புத்தொகைகள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அவர்கள் அந்த நிதியை நிலையான வைப்பு கணக்குகளிலிருந்து திரும்பப் பெற்றனர்.

இது ஊவா மாகாணத்திற்கு மட்டுமல்ல – பிற மாகாணங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, தொடர்ந்து என்னுடன் தொடர்பு கொண்டார், மேலும் கல்வி மற்றும் பிற விஷயங்களில் நான் அவரை ஆதரித்தேன். இருப்பினும், நாங்கள் எதிர் அரசியல் கட்சிகளில் இருந்தோம்.
தற்போது அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
இந்த விவகாரம் ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்டுள்ளது. ஒரு விசாரணையாலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. சந்தேகத்திற்குள்ள நபராக கூட அறிவிக்கப்படவில்லை. விசாரணை நடப்பது பழைய சம்பவங்களை சார்ந்தே. புதிய குற்றச்சாட்டுகளோ சம்பவங்களோ அல்ல.
எப்படி நியாயமானதாக இருக்க முடியும்
மற்றொரு முக்கிய விடயம் என்னவென்றால், சாமர சம்பத் பதிலளித்தவுடன் அவரை கைது செய்ததாகவே அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்
சாமர சம்பத் நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசுபவர். அவர் எதிர்க்கட்சியின் பலமான குரலாக திகழ்கிறார். இந்நடவடிக்கைகள் அவரின் நாடாளுமன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையதா என்பது பெரிய கேள்வி. எனவே, இந்த விடயத்தை அவர் நாடாளுமன்றத்தில் விசாரணைக்காக கேட்க வேண்டும். இது eாடாளுமன்ற உரிமை மீறலாக இருக்கிறதா என்பது விசாரணை செய்யப்பட வேண்டும்.”
https://www.youtube.com/embed/1_piErbqkfE

