எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக கொழும்பு மாவட்டத்தில் 1200 அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்து நாட்களுக்குள் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்வுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் புரட்சியை ஏற்படுத்தி ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடையச் செய்வதற்கு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி அடுத்த மாதம் முழுவதும் தினசரி தேர்தல் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.