யாழ் (Jaffna) மாநகர சபைக்கான ஞானப்பிரகாசம் சுலக்சன் (Gnanaprakasam Sulaksan) மற்றும் நரேந்திரன் கெளசல்யா (Narendran Kaushalya) ஆகியோரின் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் யாழில் வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக வெளியான உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, யாழ் மாநகர சபைக்கான தமிழ் மக்கள் கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபைக்கான வேட்பு மனுக்களில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் சட்டத்தை நாடவுள்ளதாக கட்சி தலைமைகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/BWJQZJ9B-BMhttps://www.youtube.com/embed/BT1WwHNXd7g