ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக National Crush என மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின் தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
பட வாய்ப்பு இதனால் கிடைக்கவில்லை.. தங்கலான் பட நடிகை பார்வதி வருத்தம்
இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
முன்பு, புஷ்பா 1 படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வாங்கிய ராஷ்மிகா தற்போது, ரூ. 7 கோடி வரை அவரது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
என்ன தெரியுமா?
இந்நிலையில், 20 ஆண்டுகள் கழித்து நயன்தாரா ஜவான் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை ராஷ்மிகா வெறும் 9 ஆண்டுகளிலேயே வாங்கிவிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.