சாவா படம்
அனிமல், புஷ்பா 2 படங்கள் மூலம் ரூ. 1000 கோடி வசூல் படங்களை கொடுத்த ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அண்மையில் வெளியான படம் சாவா.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி-சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இப்படம் ஹிந்தியில் உருவாகி இருந்தது.
பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் மற்றும் ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளார். ரூ. 130 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
சாவா படம் முதல் நாளில் இந்திய அளவில் மட்டும் ரூ. 33.1 கோடி வசூல் செய்ய உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் படம் 4 நாட்களில் சுமார் ரூ. 140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். விரைவில் படம் ரூ. 500 கோடி வசூலை எட்டிவிடும் என்கின்றனர்.