கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்மொழிந்த வேட்புமனுவை அரசியலமைப்பு சபை நேற்று (21) நிராகரித்துள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் எச்.டி.பி. சந்தனாவின் பெயரை ஜனாதிபதி அதன்போது முன்மொழிந்திருந்தார்.
21 ஆம் திகதி அரசியலமைப்பு சபை கூடியபோது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் அட்டம்பேவ் ஆகியோர் இந்த வேட்புமனுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
புதிய முன்மொழிவு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மற்றும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பிரதிநிதிகள் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு மற்றொரு பெயர் முன்மொழியப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, முன்மொழிவு வேட்புமனு கிடைத்த பிறகு, அரசியலமைப்பு சபை வரும் நாட்களில் மீண்டும் கூட உள்ளது.

