கிளிநொச்சியில் (Kilinochchi) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (20.02.2025) கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயம் மூன்றிலிருந்து
ஆரம்பிக்கப்பட்டு ஏ 9 வீதியூடாக டிப்போசந்தி வரை நடைபெற்றுள்ளது.
தொடர் போராட்டம்
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை அதிகளவு புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகளை காணொளி படமெடுத்து மற்றும் கண்காணித்து உளரீதியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தமையினை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/OoHAGU5KqIo