வரவிருக்கும் உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இது குறித்து இன்று(16.07.2026) மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனு மீதான விசாரணை
உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர் ஒரு சாராரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்றையதினம் குறித்த மனு தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர் மற்றும் சட்டத்தரணி முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மனு மீதான விசாரணையை எடுத்துக் கொள்வது தொடர்பான இந்த தீர்மானத்தை பிறப்பித்துள்ளது.
Source: https://tamilwin.com/article/request-for-postponement-of-the-advanced-level-1784187689

