முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராமேஸ்வரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்ட சிறார்கள்: படகு உரிமையாளருக்கு அபராதம்

இராமேஸ்வரம் (Rameswaram) கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து செல்லும் விசைப்படகில் 18 வயதுக்கு கீழ் உள்ள 8 சிறார்கள் கடற்றொழிலாளர்களாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடும் வழக்கில் இலங்கை கடற்படையால் (Sri Lanka Navy) சிறைபிடிக்கப்படும் ராமேஸ்வர விசைப்படகுகளில் சிறார்கள் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மீன் வளத்துத்துறை

இதன் அடிப்படையில் இராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில்
இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழில் படகுகளில் சிறார்கள் கடற்றொழிலில் பயன்படுத்தபடுகிறார்களா என்பது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தொழிலாளர் நல வாரியம் மற்றும் மீன் வளத்துத்துறை அதிகாரிகள் கூட்டாக திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இராமேஸ்வரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்ட சிறார்கள்: படகு உரிமையாளருக்கு அபராதம் | Rescue 8 Minors Involved In Fishing In Rameswram

இதன்போது, கடந்த (26) ஆம் திகதி
இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று நேற்று
(27) காலை கரை திரும்பிய 8 கடற்றொழில் படகுகளில் 8 சிறார்கள் கடற்றொழிலில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, எட்டு சிறார்களை மீட்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate)  உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் சிறார்கள் கடற்றொழிலுக்கு வரக்கூடாது, பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியதுடன் சிறார்களை கடற்றொழிலில் பயன்படுத்திய விசைப்படகின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கடற்றொழில் விசைப் படகுகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை தொழிலுக்காக பயன்படுத்தினால் படகு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரித்ததோடு, கடற்றொழிலாளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.