ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickramasinghe) ஆலோசனைக்கு அமைய வவுனியாவில் (Vavuniya) குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 10கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய குறைந்த வருமானம்
பெறுவோருக்கு அரிசி விநியோகிக்கும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் 18
மாவட்டங்களில் உள்ள 2,511,840 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
செலவிடப்பட்ட பணம்
அத்துடன், இதற்காக அரசாங்கம் 4 பில்லியன் ரூபாவை
செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ அரிசி விகிதம் இரண்டு மாத
காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/rice-distribution-in-vavuniya-1714059245

