ஆர் ஜே பாலாஜி
ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி, தற்போது பிரபல நடிகர், இயக்குனராக வலம் வருகிறார்.
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் சொர்க்க வாசல்.
அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், சானியா அய்யப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
90களில் மெட்ராஸ் சிறைச்சாலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் என்பவர் இசையமைத்துள்ளார்.
3 ஆண்டுகள் ஆன சிம்புவின் மாநாடு திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
இப்படம் வரும் 29 – ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி சிவகார்த்திகேயன் குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.
ஆர் ஜே பாலாஜி பேட்டி
அதில், “விஜய் டிவியில் திட்டம் போட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிவகார்த்திகேயன் போன்று வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது போன்று எல்லாம் யாராலும் வரமுடியாது.
அவர் கடின உழைப்பாலும் சினிமா மேல் உள்ள ஆசையாலும் திறமையை வைத்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். அவ்வாறு இருக்க விஜய் டிவிக்குள் சென்றாலே அவரை போன்று ஆகி விடலாம் என்று என்ணுவது தவறு” என்று கூறியுள்ளார்.