Courtesy: Sivaa Mayuri
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான, தமது இறுதித் தீர்மானம், 2025 ஜனவரி 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வுகளை, 2024 டிசம்பர் 17 டிசம்பர் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பான தமது கருத்துக்களை மெய்நிகராகவோ அல்லது எழுத்து மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபை
இது தொடர்பான சமர்ப்பிப்புகளை;
மின்னஞ்சல் – Email [email protected], அல்லது 076 4271030 என்ற வட்சப் இலக்கத்துக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2024 டிசம்பர் 06 அன்று, இலங்கை மின்சார சபை, தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பித்தது.
அத்துடன் தற்போதைய கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் கூறியது.
இதற்கு முன்னர், வருடாந்தம் நான்கு முறை மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என முன்னாள் அரசாங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்டிருந்தது.
இருப்பினும், 2023 இல், கட்டண திருத்தங்கள் மூன்று முறை மேற்கொள்ளப்பட்டன.
அதே நேரத்தில் இந்த ஆண்டு இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதைய அரசாங்கம் வருடத்திற்கு இருமுறை கட்டண திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.