ரோபோ ஷங்கர்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர் ஆவார்.
ரோபோ தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து, பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
சினிமாவை விட்டு அமிதாப் பச்சன் விலகுகிறாரா? அவரே கூறிய காரணம்
உடைத்த ரகசியம்
இந்நிலையில், திரு மாணிக்கம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் ரோபோ ஷங்கர் சமுத்திரகனி குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” சமுத்திரகனி என் உடன்பிறவாத சகோதரர். என் மகள் இந்திரஜா சமுத்திரக்கனியின் பெயரை பெரியப்பா என்று தான் அவருடைய போனில் சேவ் செய்து வைத்துள்ளார்.
அந்த அளவிற்கு அவர் என் குடும்பத்தில் முக்கியமானவர். ஆனால் தற்போது வரை அவர் என் பேரனை வந்து பார்க்கவே இல்லை. விரைவில் அது நடைபெறும் என்று நம்புகிறேன்.
நானும் சமுத்திரகனியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. இது தொடர்பாக பல முறை நான் அவரிடம் கூறியுள்ளேன். கண்டிப்பாக அது ஒரு நாள் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.