உக்ரைனுடனான(ukraine) போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா(russia) கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கடந்த 3 வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்ய அதிகாரிகள் இந்த நிபந்தனைகளை விதித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா விதித்த முக்கிய நிபந்தனைகளாவன,
ரஷ்யாவின் எல்லைகளை நோக்கி நேட்டோ விரிவாக்கம்
ரஷ்யாவின் எல்லைகளை நோக்கி நேட்டோ விரிவாக்கம் குறித்து ரஷ்யா நீண்ட காலமாக கவலை கொண்டுள்ளது. எனவே, உக்ரைன் நேட்டோவில் இணையக் கூடாது என்று ரஷ்யா விரும்புகிறது.
உக்ரைனில் வெளிநாட்டு இராணுவப் படைகள் இருந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ரஷ்யா கருதுகிறது.எனவே வெளிநாட்டு படைகள் உக்ரைனில் இருக்கக்கூடாது.
உக்ரைன் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு
உக்ரைனிய பகுதிகளான கிரிமியா மற்றும் 4 பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.
ரஸ்யாவின் இந்த கடும்போக்கான நிபந்தனைகளை உக்ரைன் மற்றும் சர்வதேச நாடுகள் ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் நிறுத்தத்தை ரஷ்யா ஒரு தந்திரமாக பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.