சைஃப் அலிகான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தான் சைஃப் அலிகான். இவர் நடிகர் என்பதை தாண்டி பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆம், போபாலை சேர்ந்த நவாப் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான். அதாவது, சைஃப் அலிகானின் தந்தை.
இந்த பட்டோடி அரச குடும்பத்துக்கு சொந்தமாக போபாலில் அரண்மனை மற்றும் 15 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.
வெளிவந்தது சிவகார்த்திகேயனின் SK25 படத்தின் டைட்டில்.. வெறித்தனமான அப்டேட்
ஆனால், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்களின் சொத்துக்கள் எதிரி சொத்துகளாக கருதப்பட்டு அது மத்திய அரசால் கையகப்படுத்தப்படும்.
அதிர்ச்சி தகவல்
சைஃப் அலிகான் பாட்டி பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்ததால் அந்த சொத்துக்கள் அரசுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து நடிகர் சைஃப் அலிகான் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, போபாலில் உள்ள நவாப் சொத்துகள் மீது வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய அரசாணையை பிறப்பித்தது.
இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் சைஃப் அலிகான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பிறப்பித்திருந்த தடையையும் நீக்கிவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால், சைஃப் அலிகான் அவ்வாறு செய்யாததால் அவரது 15 ஆயிரம் கோடி சொத்துக்களை அரசு எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றி கொள்ளலாம்.