முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் நடத்திய ரகசிய மந்திராலோசனை – சஜித் தரப்பு தமிழ் அரசியல்வாதிகள் இணைவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு அரசியல் கலந்துரையாடலில் சஜித் தரப்பை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தன.

கொழும்பிலுள்ள(Colombo) பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் மற்றும் பி.திகாம்பரம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

சமகால அரசியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

அரசியல் கட்சிகள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

ரணில் நடத்திய ரகசிய மந்திராலோசனை - சஜித் தரப்பு தமிழ் அரசியல்வாதிகள் இணைவு | Sajith Party Members In Ranil S Meeting

மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி அறுதிப்பெரும்பான்மையுடன் பலமாக நிலையில் ஆட்சியல் உள்ளது.

தமிழ் அரசியல்வாதிகள்

இந்நிலையில் ரணில் – சஜித் தரப்பு ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ரணில் நடத்திய ரகசிய மந்திராலோசனை - சஜித் தரப்பு தமிழ் அரசியல்வாதிகள் இணைவு | Sajith Party Members In Ranil S Meeting

இந்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தொடர்ந்தும் மறுத்து வந்த நிலையில், தற்போது அதில் நெகிழ்வு தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.  

இவ்வாறான நிலையில் அவரின் கட்சியை சேர்ந்த இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் ரணிலின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மனோ கணேசன் தோல்வி அடைந்த நிலையில், தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.