இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலி நளீம் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
சபையில் அறிவிப்பு
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முஹமட் சாலி நளீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஹமட் சாலி நளீம் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.