நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி ஹிந்தி சினிமாவில் கலக்க களமிறங்கியவர் நடிகை சமந்தா.
வேகமாக சென்றுகொண்டிருந்த அவரது சினிமா பயணம் மயோசிடிஸ் என்ற கொடிய நோயால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் அவர் நிறைய படங்கள் கமிட்டாக தயங்கியதாகவும், கமிட்டான சில படங்களின் அட்வான்ஸை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தி பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் நடித்தவர் வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். பொழுது போக்கு நிகழ்ச்சி, விளம்பர பாடங்களில் மட்டும் தற்போது பங்கேற்று வருகிறார் சமந்தா.

வாட்ச் விலை
தற்போது புதிய புதிய போட்டோ ஷுட் நடத்தி வரும் சமந்தா அதனை இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தாறுமாறாக வருகிறது. அப்படி ஒரு போட்டோ ஷுட்டில் நடிகை சமந்தா வைரம் பதிக்கப்பட்ட வாட்ச் ஒன்றை அணிந்திருக்கிறார்.
ஸ்பைரல் பிரேஸ்லெட்-ஸ்டைல் பேண்ட் மற்றும் சில்வர் ஓபலைன் டயல் கொண்ட இந்த வாட்சில் கட் டைமண்ட்ஸ் பதிக்கப்பட்டுள்ளதாம், அவர் அணிந்திருக்கும் இந்த வாட்ச் Serpenti Spiga.
போட்டோ ஷுட்டில் சமந்தாவை தாண்டி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள இந்த வாட்ச் விலை ரூ. 70 லட்சம் எனப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/samantha-diamond-cut-serpenti-spiga-watch-price-1714235609

