எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் அடுத்த தலைவர் என்ற சமுதாய கலந்துரையாடல் ஒருபோதும் உருவாகவில்லை மொட்டு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அது அவருடைய தவறல்ல எனவும் இயற்கையாக ஏற்படுத்தப்பட்டதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சமுதாய கலந்துரையாடல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே நாட்டின் தலைவர் யார் என்ற சமுதாய கலந்துரையாடல் உருவாக வேண்டும்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தொடர்பில் அவ்வாறான கலந்துரையாடல் இல்லை எனினும், நாமல் தொடர்பிலான கலந்துரையாடல் சமுதாயத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அது செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நாட்டின் அடுத்த தலைவர் என்ற சம்பாஷனையின் காலம் 25 வருடங்கள் பழைமையானதாகும்.
வெற்றி வாய்ப்பு
1999-2000 ஆண்டுகளில் தலதா அத்துகோரல மற்றும் ராஜித்த சேனாரத்தின ஆகியோர் இதனை ஏற்படுத்தினர் அதனாலே ரணிலை விடுத்து அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அடுத்த ஜனாதிபதி சஜித் என்ற சமூக கலந்துரைடாலுக்கு பத்து வருடங்கள் நெருக போகிறது, ஆறு வருடங்கள் முடிந்து விட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் அவரின் வெற்றி வாய்ப்பு அவரின் கையைவிட்டு சென்றது” என அவர் தெரிவித்துள்ளார்.