முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு(Batticaloa) – கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலையில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 54
மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கலடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இன்று(11.03.2025)
இதன்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள்

அந்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

31 மாணவர்களுக்கு நோய் நிலைமை பதிவான நிலையில், சிற்றுண்டிச்சாலையில் உணவை உட்கொண்ட 54 மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகப் பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் | School Students Hospitalized In Batticaloa

இதன்படி, 31 பேர் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 22 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணை

அதேநேரம், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகக் குறித்த சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரைக் காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் | School Students Hospitalized In Batticaloa

மேலும், பரிசோதனைகளுக்காக மாணவர்கள் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகளை பொது சுகாதார பரிசோதகர்கள் பெற்றுள்ளதாக கரடியனாறு காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்