ஆயிஷா
ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை ஆயிஷா.
இந்த சீரியல் மூலம் கிடைத்த பிரபலம் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி இருந்தார். பிக்பாஸ் பிறகு ஆயிஷா, லோகேஷ் என்பவரை காதலிக்க நிச்சயதார்த்தமும் முடிந்தது.
அதன்பின் ஆயிஷா திருமணம் குறித்து எதுவும் அறிவிப்பு விடவில்லை, மாறாக உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருந்தார், தற்போது அதுவும் முடிவுக்கு வந்துவிட்டது.
13 நாள் முடிவில் விஜய் சேதுபதியின் விடுதலை 2 படம் செய்த மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
புதிய சீரிஸ்
இந்த நிலையில் நடிகை ஆயிஷா அடுத்து நடிக்கப்போகும் புதிய சீரியஸ் குறித்து தகவல் வந்துள்ளது.
அதாவது அவர் தாரா என்ற புதிய சீரிஸில் நடிக்க களமிறங்கியுள்ளாராம், அது Vision Time Tamizh என்ற யூடியூப் சேனலில் வரப்போகிறதாம். அவருக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகர் புவியரசு நடிக்க இருக்கிறாராம்.
View this post on Instagram