தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்காக நிறுத்தப்பட்ட தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து அதற்காக பயன்படுத்தப்பட்ட சின்னத்தை வேறு சிலர் தற்போது கையில் எடுத்திருப்பது கொள்ளை முரண்பாட்டோடு கூடிய விடயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) குற்றம் சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் (Kilinochchi) அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (12) விஜயதசமி விழாவும் மற்றும் மாவட்டத்தின் இலங்கை தமிழரசு கட்சியினுடைய வட்டார உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக தமிழ் மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்த பொது வேட்பாளரை ஆதரித்தமை என்பது உண்மையாகும்.
அதற்காக பாவிக்கப்பட்ட சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும் அதனை அவர்கள் செய்திருக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும்.
தமிழரது ஒற்றுமை
குறிப்பாக தமிழரது ஒற்றுமை தேசத் திரட்சி தமிழர்களை ஒன்றுபடுத்துதல் என்ற காரியத்துக்காக ஆற்றப்பட்ட அந்த விடயத்தில் தமது சின்னமாக அதனை கையில் எடுத்திருப்பது ஒரு முரணான விடயம்.
ஜனாதிபதித் தேர்தல்கள் பல நடைபெறுகின்றன, பல்வேறு சின்னங்களுக்காக மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்ற அடிப்படையிலே நாங்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவுகளை வழங்கி இருக்கின்றோம்.
அத்துடன், வேட்பாளர்கள் நியமனங்களில் திருப்தி உண்டா ? இல்லையா ? என்பதற்கு அப்பால் தற்போதைய கால சூழலில் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் அதுவே எனது நிலைப்பாடு” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/wh7RMjRh0A8?start=55