நடிகை சினேகா தற்போதும் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார் என்றாலும் துணிக்கடை பிஸ்னஸ், குடும்பம் என பிசியாக இருந்து வருகிறார்.
மேலும் சினேகாவுக்கு 44 வயது ஆனாலும், அவரது தோற்றம் பெரிய மாற்றம் இல்லாமல் இளமையான லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கேள்வியால் டென்ஷன் ஆன பிரசன்னா
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் சினேகாவை பார்த்து ‘உங்களுக்கு வயது எல்லாம் வெறும் number மட்டும் தான்’ என சொல்கிறார். அதை கேட்டு கோபமான பிரசன்னா நாக்கை துருத்தி ‘ஏய்..’ என அந்த செய்தியாளரை மிரட்டி இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.


