முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிக்கந்தர் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர் முருகதாஸ். ஆனால், சமீபத்திய இவருடைய படங்கள் எதும் பெரிய வெற்றியை பெறாத நிலையில், பாலிவுட் பக்கம் சென்று சல்மான் கானுடன் கூட்டணி அமைத்த சிக்கந்தர் படம், முருகதாஸ், சல்மான் கான் எதிர்ப்பார்த்த வெற்றியை பெற்றதா பார்ப்போம்.

சிக்கந்தர் திரை விமர்சனம் | Sikandar Movie Review

கதைக்களம்

சத்யராஜ் மும்பையில் ஒரு முக்கிய அரசியல்வாதி. இவருடைய மகன் விமானத்தில் ஒரு பெண்ணிடம் கலாட்டா செய்ய, அங்கிருக்கும் சல்மான் கான் அதை தட்டி கேட்கிறார். அதோடு அந்த பெண்ணிடம் மன்னிப்பும் கேட்க வைக்கிறார்.

எப்படியோ இந்த மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆக, சல்மான் கானை எதாவது செய்ய வேண்டும் என சத்யராஜ் போலிஸை அனுப்ப பிறகு தான் தெரிகிறது ராஜ்கோட் பகுதி ராஜா தான் இந்த சல்மான் கான் என்பது.

சிக்கந்தர் திரை விமர்சனம் | Sikandar Movie Review

அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்க, ஒரு முறை எதிரிகளுடன் சண்டைபோடும் போது எதிர்பாராத விபத்தில் சல்மான் மனைவி ராஷ்மிகா இறக்கிறார்.

அவருடைய கண், லங்ஸ், இதயம் என மூன்றையும் மூவருக்கு வைக்க, அவர்களை தேடி செல்கிறார் சல்மான். அதே நேரத்தில் சத்யராஜ் மகன் சல்மானை துரத்தி செல்லும் போது கார் விபத்தில் இறக்க , சத்யராஜ் உன் மனைவி உயிர் இன்னும் 3 பேர் உடலில் இருக்கிறது, அவர்களை நான் கொல்வேன் என கங்கனம் கட்ட, சல்மான் எப்படி அவர்களை காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை..

சிக்கந்தர் திரை விமர்சனம் | Sikandar Movie Review 

படத்தை பற்றிய அலசல்

சல்மான் கான் 100 பேரை அடித்தால் கூட நம்பலாம் போல, அப்படி ஒரு கம்பீரம் ராஜாவாகவே கண்முன் தெரிகிறார். மும்பை வந்து டாக்ஸி ட்ரைவருக்கு கட்டு கட்டாக பணம் கொடுப்பது, ராஷ்மிகா லங்ஸ் இருக்கும் சிறுவன் வாழும் தாராவியை சுத்தம் செய்வது, கண் இருக்கும் காஜல், இதயம் இருக்கும் இளம்பெண்ணுக்கு உதவுவது என கச்சிதமாக இருக்கிறார்.

ஆனால், என்ன கொஞ்சம் கூட உடலை அசைத்து, முகத்தை அசைத்து நடிக்க மாட்டேன் என்கிறார். ஒரே முகபாவம் தான் அத்தனை காட்சிகளிலும். ராஷ்மிகாவும் கொஞ்சம் கூட படத்தில் செட் ஆகவே இல்லை, பெரிய எமோஷ்னலையும் அவர் ஆடியன்ஸுக்கு கடத்தவில்லை. அதுவே பெரிய மைன்ஸ் ஆக படத்திற்கு அமைந்துள்ளது.

சிக்கந்தர் திரை விமர்சனம் | Sikandar Movie Review

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

சத்யராஜ் வில்லன் என்றாலும் தமிழில் அவர் பல மேனரிசம் சுவாரஸ்யமான வசனம் பேசி கவர்வார், இதில் ஹிந்தி டப்பிங் சுத்தமாக அவருக்கு செட் ஆகவில்லை. நமக்கும் வில்லன் பீலிங் வரவில்லை.

படம் முழுவதும் வெறும் சண்டைக்காட்சிகளை நம்பி மட்டுமே தான் எடுத்துள்ளார்கள் தவிற, ஒரு எமோஷன்ல் Connect-ம் இல்லை.

ஒரு கட்டத்தில் இது முருகதாஸ் படம் தான என கேட்க தோன்றுகிறது.

முருகதாஸ் ஹீரோக்களுக்கு என்றே ஒரு அரசியல் டச் இருக்கும், இதிலும் கிளைமேக்ஸில் நான் CM, PM ஆவேனா என்று தெரியவில்லை.

சிக்கந்தர் திரை விமர்சனம் | Sikandar Movie Review

ஆனால், MLA ஆவேன் அது என் ரூட் இல்லை, என்னை அதில் இழுக்காதீர்கள் என பன்ச் வைத்துள்ளார்.

படத்தின் டெக்னிக்கலாக சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை ஹிந்திக்கு ஓகே, ஆனால் நம்ம ஆடியன்ஸுக்கு என்ன சநா என்றே கேட்க தோன்றுகிறது.

க்ளாப்ஸ்

சண்டைக்காட்சிகள்.

ப்ரீ இண்டர்வெல் காட்சி.

சல்மான் ஒரு சின்ன பையன் எமோஷ்னல் காட்சி

பல்ப்ஸ்

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.

செயற்கை தனமான பல காட்சிகள்.

மொத்தத்தில் சிக்கந்தர் சல்மான், முருகதாஸ் என யாருக்குமே கம்பேக் இல்லை. 

சிக்கந்தர் திரை விமர்சனம் | Sikandar Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.