சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்திக்கொண்டு இருக்கும் தொடர் என்றால் அது சிறகடிக்க ஆசை தான்.
வாரா வாரம் வரும் டிஆர்பியில் இந்த தொடர் தான் டாப்பில் இருந்து வருகிறது. இன்றைய எபிசோடில், மீண்டும் மலேசியா பிரச்சனை ரோஹினினை துரத்துகிறது. இன்னொரு பக்கம் ஸ்ருதி-ரவி ரெஸ்டாரன்ட் கலாட்டா நடக்கிறது.
கடைசியில் வீணாக வம்பை விலைக்கு வாங்கும் மீனாவின் செயல் நடக்கிறது. மற்றபடி சுவாரஸ்யமாக இன்றைய எபிசோடில் ஒரு கதைக்களமும் இல்லை.
புரொமோ
முத்து, டிராபிக் போலீஸை வீடியோ எடுத்து பிரச்சனை செய்தது இப்போது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. போலீஸ் அதிகாரி, டிராபிக் போலீஸை அழைத்து கண்டிக்க அவர் கடும் கோபம் கொள்கிறார்.
3 நாள் சஸ்பென்ட் ஆன கோபத்தில் முத்துவை ஒரு வழி செய்ய வேண்டும் என கோபம் கொள்கிறார்.
View this post on Instagram