கொலன்னாவ, பொத்துவில்கும்புர – நாகஹமுல்ல குப்பை மேட்டுக்கு அருகில் மர்மமான
முறையில் உயிரிழந்த ஒருவரின் என்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக
வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மண்டை ஓடொன்று, முதுகெலும்பு மற்றும் கால் எலும்புகள்,
அத்துடன் கறுப்பு தொப்பி மற்றும் மஞ்சள் நிற காற்சட்டை ஆகியவை காணப்பட்டதாக
பொலிஸ் தெரிவித்துள்ளது.
இறந்தவரின் அடையாளம்
குப்பை மேட்டுக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் பட்டம்
விட்டுக்கொண்டிருந்தபோது, இந்த எச்சங்களைக் கண்டெடுத்ததாக அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.

இறந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் வெல்லம்பிட்டி பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

