தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் (S. Sritharan) தமிழ் பொது
வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கும் (P. Ariyanethran) இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிறீதரனின் இல்லத்தில் இன்று (22.08.2024) மாலை நடைபெற்றுள்ளது.
இதன்போது, சிறீதரனால் தமிழ் பொது வேட்பாளர்
அரியநேந்திரன் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியுள்ளனர்.
இருப்பினும், தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்கப்பட மாட்டாது என மத்தியக்குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிறீதரனுக்கும் பா.அரியநேந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.