முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடுகளுக்கு விற்கப்போகும் கடல் வளம்…! கடற்றொழில் அமைச்சர் மீது குற்றச்சாட்டு

ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வளத்தை விற்கப்போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்விஎழுப்பியுள்ளார். 

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(12.01.2024) நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“புதிய கடற்றொழில் அமைச்சர் ஐரோப்பிய நாடுகளுடன் பேச வேண்டும் என்றுள்ளார். இது வரை எந்த அமைச்சரும் பேசியதில்லை இது எமக்கு சந்தேகந்தை ஏற்படுத்தியுள்ளது.

கடல் வளம்

ஐரோப்பிய நாடுகளை வரவழைத்து கடலை கூறுபோட்டு விற்கப்போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இது தொடர்பில் எமது கடற்றொழில் அமைப்புக்கள் மெளனமாக உள்ளது பேராபத்தானது. அமைச்சரின் குறித்த விடயம் பற்றி பேச வேண்டும். 

கிளீன் சிறிலங்கா என்று ஒன்றைத் தொடங்கியுள்ளீர்கள். இதில் என்ன நடக்கிறது? எமது நாட்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தி சட்டத்தை நிரூபியுங்கள். 

வெளிநாடுகளுக்கு விற்கப்போகும் கடல் வளம்...! கடற்றொழில் அமைச்சர் மீது குற்றச்சாட்டு | Sri Lankan Marine Resources Fisherman S Complaint

இது தான் கிளீன் சிறிலங்கா அதைவிடுத்து சுற்றுநிரூபங்களை விடுவது மட்டுமே நடைமுறையில் கொண்டு வருவதில்லை. சட்டத்தையும் சுற்றுநிரூபங்களையும் நடைமுறைப்படுத்துங்கள். எல்லாம் கிளீனாகும்.

நாடாளுமன்றில் து.ரவிகரன் கடற்றொழிலாளர்கள் சார்பில் இந்திய கடற்றொழிலாளர்களினால் ஏற்படும் பிரச்சினை பற்றி பேசியுள்ளார். அதை வரவேற்கிறோம், பேச்சோடு நின்று விடாமல் தொடர்ந்து நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.

பல தமிழ் அரசியல் கட்சிகளிடமும் நாடாளுமன்ற பிரதி நிதிகளிடமும் பல ஆவணங்களைக் கையளித்தோம். ஒன்றும் நடக்கவில்லை. 

சட்டவிரோத நடவடிக்கை

 கடற்றொழில் தொடர்பில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் நாடாளுமன்றில் குரல் எழுப்புங்கள். அடுத்து தைப்பொங்கள் வருகிறது. நாம் கடலுக்குள் செல்ல முடியாது நிலையுள்ளது. 

இந்திய கடற்றொழிலாளர்களது ரோலர் படகுகள் எமது கடலில் வளங்களை அள்ளி எமது கடல் வளம் நாசமாகிறது. இப்போது வந்த அரசும் அமைச்சரும் நல்ல விடயங்களைப் பேசுவார்கள் நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்களின் செயற்பாடும் கதையளவிலேயே உள்ளது. 

எமது கடற்பரப்பில் இடம்பெறும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுங்கள்.

வெளிநாடுகளுக்கு விற்கப்போகும் கடல் வளம்...! கடற்றொழில் அமைச்சர் மீது குற்றச்சாட்டு | Sri Lankan Marine Resources Fisherman S Complaint

இங்கிருக்கும் உள்ளூர் சங்கங்கள் ஏன் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஒரு நடைமுறையையும் உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு ஒரு நடைமுறையும் கொண்டுள்ளீர்கள். 

வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு உள்ளூரில் அனுமதியை வழங்குவதால் கஞ்சா கடத்தல் உட்பட போர்க்காலத்தில் கடலில் தாண்டு போயுள்ள கடற்படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் படகுகளின் பாகங்களை திருடிச் செல்ல வழி திறந்து விடப்பட்டுள்ளது.

கடல்வளம் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள், சட்ட விரோத தொழில் முறைகள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறல்களால் கடல்வளம் அழிக்கப்படுகிறது, நாசம் செய்யப்படுகிறது. இதைக் கிளீன் செய்யுங்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.