நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையை முன்னிட்டு, பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன நேற்றைய ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதன்படி இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464

