முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தல் : நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலுக்காக நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக காவல்துறையினர் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 63,000ற்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 3,000ற்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமை 

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக காவல்துறை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 2,000ற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் : நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் | Special Security Arrangements Nation Wide Pres Ele

அதேநேரம் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் தலா 2 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்காகவும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் காவல்துறை தலைமையகத்தில் விசேட கண்காணிப்பு மையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 9 மாகாணங்களிலும் விசேட கண்காணிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்