நாடோடிகள்
தமிழ் சினிமாவில் ஒரு இயல்பான கதைக்களத்தை கொண்டு கடந்த 2008ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாடோடிகள்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க கஞ்சா கருப்பு, விஜய் வசந்த், அனன்யா, அபிநயா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
காதலுக்காக நாங்கள் எதையும் செய்வோம் என துணிச்சலாக கைகோர்த்த நண்பர்களைப் பற்றிய படம் தான் இது.
நாடோடிகள் என பெயர் சொன்னதுமே மக்களுக்கு சம்போ சிவ சம்போ என செம பவரான பாடல் தான் முதலில் நியாபகம் வரும். கதை, நடிகர்கள், இசை என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்திருந்தது இந்த படம்.
முதல் சாய்ஸ்
ஒரு படம் இயக்குனர் உருவாக்கும் போது ஒருவரை நியாபகம் வைத்து உருவாக்குவார், ஆனால் தயாரிப்பாளரிடம் சென்றால் நாம் நினைத்தது சில சமயம் நடக்காது.
அப்படி நாடோடிகள் படத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சசிகுமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சேரன் தானாம், இதனை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.